உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ராயப்பேட்டை - ஆப்பிரம்பட்டு சாலை மோசமானதால் வாகன ஓட்டிகள் அவதி

ராயப்பேட்டை - ஆப்பிரம்பட்டு சாலை மோசமானதால் வாகன ஓட்டிகள் அவதி

வானுார்; ராயப்பேட்டையில் இருந்து ஆப்பிரம்பட்டு செல்லும் சாலை படுமோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.வானுார் அடுத்த ராயப்பேட்டை, ஆப்பிராம்பட்டு, நெசல் கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் புதுச்சேரி, ஆரோவில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, வானுார், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர்.குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் புதுச்சேரி, வானுார் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்குச் சென்று படித்து வருகின்றனர்.மேலும், சஞ்சீவிநகர், ஆலங்குப்பம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராம மக்களும், காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.இந்த சாலையில், ராயப்பேட்டையில் துவங்கி ஆப்பிரம்பட்டு வரை 4 கி.மீ., துாரம் தார் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.மழைக் காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். வாகனங்கள் பஞ்சராகின்றன.இது குறித்து அப்பகுதி மக்கள், பி.டி.ஓ., அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை சாலையை புதுப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை