உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை விழுப்புரத்தில் வாகன ஓட்டிகள் அவதி

 போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை விழுப்புரத்தில் வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம்: விழுப்புரம், கமலா கண்ணப்பன் நகர் மெயின் ரோட்டில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் பின்புறத்தில் இ.எஸ்., கார்டன், கமலா கண்ணப்பன் நகர் உள்ளிட்ட பல குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் இந்த சாலை வழியாக பயணித்து மாம்பழபட்டு சாலை வழியாகவும், பெருந்திட்ட வளாகம் வழியாகவும் சென்று வருகின்றனர். ஆனால், இந்நகரில் உள்ள தார் சாலைகள் சாலையில் ஜல்லிகள் படுமோசமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, அதிகாரிகள் கண்ணப்பன் நகரில் உள்ள சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, புதிய சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Arvind
டிச 10, 2025 11:03

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு முழுவதும் ரோடு போடுவதற்காக பெயர்த்துவிட்டு இரண்டு பக்க ரோடுகளையும் ஒரு மாதமாக இன்னும் ரோடு போடவில்லை. ஒரு பக்க ரோடு முடித்துவிட்டு அடுத்த பக்க ரோடு ஆரம்பிக்காமல் எடுத்த உடன் இரண்டு பக்க ரோடுகளையும் நோண்டி போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்து விட்டார்கள். இரு சக்கர வாகனத்தில் இந்த ரோட்டில் பயணிக்க உத்தரவாதமில்லை. எந்த புத்திசாலியின் திட்டமிடலோ தெரியவில்லை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை