மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர் தற்கொலை : போலீஸ் விசாரணை
28-Oct-2025
கோட்டகுப்பம்: கோட்டக்குப்பத்தில் நகராட்சி ஊழியர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெரிய கோட்டக்குப்பம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் எட்டியான், 58; கோட்டக்குப்பம் நகராட்சி துாய்மைப் பணியாளர். குடிப்பழக்கம் உள்ள இவர், 2 மாதங்களாக சர்க்கரை நோய் அதிகமாக இருந்ததால் குடிப்பழக்கத்தை விட்டு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வேலைக்குச் சென்ற அவரது மருமகள் மகேஸ்வரி, நேற்று மதியம் 12:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, எட்டியான் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
28-Oct-2025