உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போலி சான்றிதழ் சமர்பித்த அரசு ஊழியருக்கு நுாதன தண்டனை

போலி சான்றிதழ் சமர்பித்த அரசு ஊழியருக்கு நுாதன தண்டனை

விழுப்புரம் : சென்னை, சோலையூரை சேர்ந்தவர் வெங்கடபெருமாள். வணிகவரித் துறையில் துணை ஆணையராக பணிபுரிந்தபோது கடந்த 2011ம் ஆண்டு இறந்தார். இவரது மகன் ராஜாபாபு,30; கருணை அடிப்படையில் விழுப்புரம் வணிகவரித் துறையில் உதவியாளராக அரசு பணியில் சேர்ந்தார்.அவரின் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மையை அறிவதற்காக, வணிகவரி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், போலி சான்றிதழ் என்பது தெரியவந்தது.பின், இதுபற்றி, கடந்த 2013ம் ஆண்டு வணிக வரித் துறை உதவி ஆணையர் சுமித்ரா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜாபாபு மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.1ல் நடந்து வந்த இவ்வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ராதிகா, குற்றம் சாட்டப்பட்ட ராஜாபாபுவிற்கு, 3 ஆண்டுகள் அரசு நன்னடத்தை அலுவலரின் (சமூக நலத்துறை) கண்காணிப்பில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை