உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  இரண்டு மாவட்டங்களில் புதிய எஸ்.பி.,க்கள் நியமனம் 

 இரண்டு மாவட்டங்களில் புதிய எஸ்.பி.,க்கள் நியமனம் 

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய எஸ்.பி.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., சரவணன் பதவி உயர்வு பெற்று டி.ஐ.ஜி.,யாக திருநெல்வேலி சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி.,யாக செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., சாய் பிரணித் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., மாதவன், தென்காசி மாவட்டத்திற்கு எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, தென்காசி மாவட்டத்தில் இருந்த எஸ்.பி., அரவிந்த், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தீராஜ்குமார் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை