ஊட்டச்சத்து உணவு வழங்கல்
விழுப்புரம்: அரசு மருத்துவமனையில் காசநோய் பாதித்தவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட காசநோய் பிரிவு சார்பில், திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, காசநோயால் பாதிக்கப்பட்டு, மருந்து உட்கொண்டு வரும் குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து உணவு மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. சென்னை வசந்தம் பவுண்டேஷன் அமைப்பினர் ஊட்டச்சத்து உணவு வழங்கினர். தலைமை மருத்துவ அலுவலர் முரளி தலைமை தாங்கி, அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து வழங்கி, காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்து எடுத்துக்கொள்ளும்போது, ஊட்டச்சத்து எடுத்து கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். நிலைய மருத்துவர் கோதை, வசந்தம் பவுண்டேஷன் நிறுவனர் சாம்சன் டேனியல், தலைமை செவிலியர் காமாட்சி, மாவட்ட நல கல்வியாளர் ராஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.