உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆற்றங்கரையில் முதியவர் உடல்

ஆற்றங்கரையில் முதியவர் உடல்

விழுப்புரம் : வளவனுார் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஆற்றங்கரையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வளவனுார் அடுத்த எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில், மலட்டாறு செல்கிறது. இந்த ஆற்றங்கரையில் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்த அந்த நபர் குறித்த தகவல் தெரியவில்லை.இது குறித்து வி.ஏ.ஓ., வரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை