உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி ஒருவர் பலி

விழுப்புரம் : விழுப்புரத்தில் சாலையை கடக்க முயன்றவர் பஸ் மோதி இறந்தார். விழுப்புரம், அகரம்பாட்டை திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர் ஷேக் ஜின்னா மகன் ஷேக் அக்தர், 32; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, வீட்டின் அருகே உள்ள முத்தாம்பாளையம் புறவழிச் சாலை சந்திப்பில் இருந்து, நடந்து சாலையைக் கடந்தார். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற தனியார் பஸ் ேஷக் அக்தர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை