செஞ்சி : மேல்மலையனுார் அடுத்த தேவனுார் சாத்தம்பாடி சாலையில் ஜி.பி.வில்லேஜ் ரிசார்ட் திறப்பு விழா நடந்தது.ஜி.கே.ஜூவல்லரி மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர் அஞ்சாஞ்சேரி கணேசன் தலைமை தாங்கினார். ஐகோர்ட் வழக்கறிஞர் பரமசிவம் முன்னிலை வகித்தார். அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் புதிய ரிசார்ட்டை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார்.நிகழ்ச்சியில், செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மேல்மலையனுார் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், முன்னாள் ஒன்றிய சேர்மன் ரங்கநாதன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி, பாலகிருஷ்ணன்.வழக்கறிஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் அருண்தத்தன், சேத்துப்பட்டு ஒன்றிய சேர்மன் முருகன், வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வராஜ், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சங்கர், செயலாளர் பாலாஜி சுரேஷ், நிர்வாகிகள் அன்பு, அறிவு செல்வன், சி.எஸ்.ஐ., அருட்தந்தை சத்தீஷ், பெரிய நொளம்பை சர்ச் அருட்தந்தை அலெக்ஸ்.தேவனுார் ஊராட்சி தலைவர் சாந்தி சக்திவேல், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, விஸ்வகேது, வழக்கறிஞர்கள் எவான்ஸ், ராஜவேலு, பிரவீன், பழனிவேல், வீரபாண்டியன் பங்கேற்றனர். அஞ்சாஞ்சேரி சரவணன் நன்றி கூறினார்.விழாவில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர் இல்லங்களைச் சேர்ந்த தொண்டு அமைப்புகளுக்கு உணவு பொருட்கள் வாங்க நிதியுதவி வழங்கப்பட்டது.