உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேம்பால சீரமைப்பு பணி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மேம்பால சீரமைப்பு பணி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டிவனம் : திண்டிவனம் மேம்பால சீரமைப்பு பணிக்காரணமாக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.திண்டிவனம் மேம்பாலம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது.ஏற்கனவே பாலத்தின் மேல்பகுதியில், மூன்று மார்கங்களுக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டுவிட்டது. தற்போது மேம்பாலத்திலிருந்து செஞ்சி மார்க்கமாக செல்லும் சாலை சீரமைக்கும் பணி துவங்க உள்ளது. இதையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் திண்டிவனம் காமராஜர் சிலை அருகிலுள்ள நேரு வீதியிலிருந்து செஞ்சி ரோடு, சந்தை மேடு வரையிலான சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று துவங்கியது.நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா தலைமையில், இளநிலை பொறியாளர் ராமு மற்றும் டவுன் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் பொக்லைன் மற்றும் சாலைப்பணியாளர்கள் உதவியுடன் கடைகளின் முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி