உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பட்டாளி சமூக ஊடக பேரவை மாநில செயற்குழு கூட்டம்

 பட்டாளி சமூக ஊடக பேரவை மாநில செயற்குழு கூட்டம்

திண்டிவனம்: வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாளி சமூக ஊடக பேரவை மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கே.ஆர்.எஸ். அம்மா மகாலில் நேற்று காலை பட்டாளி சமூக ஊடக பேரவை முதல் மாநில செயற்குழு கூட்டம், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. கட்சி கவுரவ தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி, சமூக ஊடக பேரவை நிர்வாகிகள் சோழன்குமார், துரைகோபி, தொண்டி ஆனந்தன், கொள்கை பரப்பு செயலாளர் வினயரசு, விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் ஜெயராஜ், புகழேந்தி, திண்டிவனம் நகர செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் செயல் தலைவர் ஸ்ரீ காந்திக்கு, ஊடக பேரவை சார்பில் திரிசூலம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. கூட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும், செயல் தலைவராக ஸ்ரீகாந்தி, மாநில இளைஞரணி தலைவராக தமிழ்க்குமரனை நியமித்ததற்கு நன்றி தெரிவித்தல், வரும் டிச.12 தேதி தமிழகம் முழுவதும் நடக்க உள்ள இடஒதுக்கீட்டு போராட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டடது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ