உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

மயிலம்: மயிலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு பிரசார முகாம் நடந்தது.மாசு கட்டுப்பாட்டு வாரியம், மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியின் நாட்டு நல பணித் திட்டம், மயிலம் பொம்மபுர ஆதீன திருமடம் சார்பில் நடந்த முகாமிற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற் பொறியாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.தமிழ்க் கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பதின் முக்கியத்துவம் குறித்து மாணவ மாணவியர்கள் உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. பின், கோவில் வளாகத்தில் குவிந்திருந்த பிளாஸ்டிக் பொருட்களை மாணவர்கள் அகற்றினர். நாட்டு நலப் பணித்திட்ட உதவி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை