உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்

 கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள்

விழுப்புரம்: விழுப்புரம் நேருஜி சாலையில் தி.மு.க., கட்சி அலுவலகம் அருகே கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் துார்ந்து துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. விழுப்புரம் நேருஜி சாலையில் ஏராளமான கடைகள், வணிக வளாகங்கள் மட்டுமின்றி, பள்ளிகள், மருத்துவமனைகள், கோவில்கள் உள்ளது. இச்சாலையில் உள்ள நகர தி.மு.க., அலுவலகம் அருகே செல்லும் கால்வாயில் பல மாதங்களாக பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி, கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கழிவுநீர் கால்வாய் குப்பைகளை துார்வாறி கழிவுநீர் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி