மேலும் செய்திகள்
பா.ம.க., ஆலோசனை
17-Aug-2025
விழுப்புரம்,:விழுப்புரத்தில், மத்திய மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை வகித்து, ஆலோசனை வழங்கினார். மாநில வன்னியர் சங்க துணை தலைவர் சசிக்குமார், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்வாணன், ஒன்றிய செயலாளர்கள் குழந்தைவேல், துரை, சந்தோஷ், எழில், சக்திவேல், ராமச்சந்திரன், காமராஜ், செல்வகுமார், மாநில இளைஞர் சங்க துணை செயலர் போஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி தலைவர் ஆனந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் தமிழ்செல்வன், கிருஷ்ணமூர்த்தி, பூராசாமி, சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், நாளை மறுதினம் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், மாவட்ட நிர்வாகிகள், கட்சியினர் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
17-Aug-2025