உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்த நாள் விழா

பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்த நாள் விழா

வானுார்; வானுார் கிழக்கு ஒன்றிய பா.ம.க., சார்பில், அக்கட்சி தலைவர் அன்புணி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள அதன் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகு (எ) ராகவேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். விழாவில் ஏழை எளியோருக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு தலைவர் கோபால், மாநில துணை தலைவர்கள் தர்மன், சம்பத், மாநில தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் ராமலிங்கம், மாநில உழவர் பேரியக்க துணை தலைவர் ஆறுமுகம், மாநில இளைஞரணி துணை செயலாளர் முத்து, மாவட்ட துணை செயலாளர் சவுந்தர், இளைஞர் சங்க துணை செயலாளர் அன்பு, ஒன்றிய தலைவர் கலைவாணன், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணாயிரம், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் பிரகாஷ், நைனார்பாளையம் தென்னரசு, மாவட்ட துணை செயலாளர் கதிர்வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை