உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணை மிரட்டிய நபருக்கு போலீஸ் வலை

பெண்ணை மிரட்டிய நபருக்கு போலீஸ் வலை

விழுப்புரம் : விழுப்புரத்தில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட பெண்ணை மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். .விழுப்புரம் சேவியர் காலனி பகுதியை சேர்ந்தவர் செபஸ்டின் மனைவி அமலராணி,31; இவரிடம், எதிர்வீட்டை சேர்ந்த மைக்கேல்,49; என்பவர், கடந்த 4 மாதங்களுக்கு முன், 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.இந்த கடனை திருப்பி தரும்படி அமலராணி கடந்த 30ம் தேதி கேட்டார். அதற்கு மைக்கேல், அமலராணியை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில், மைக்கேல் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி