உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தொழிலாளி தவறவிட்ட பணம் போலீசார் மீட்டு ஒப்படைப்பு

 தொழிலாளி தவறவிட்ட பணம் போலீசார் மீட்டு ஒப்படைப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ரூ. 50 ஆயிரம் பண பையை போலீசார் மீட்டு தொழிலாளியிடம் ஒப்படைத்தனர். விக்கிரவாண்டி வட்டம் எசாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், 63; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை நேமூரில் உள்ள தனது நண்பர் சகாயத்திடம் ரூ. 50,000 கடன் பெற்றுக் கொண்டு சைக்கிளில் வீடு திரும்பினார். செல்லும் வழியில் பணம் மாயமானது. இது குறித்து கஞ்சனுார் போலீசில் புகார் தெரிவித்தார். சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஏட்டு ஏழுமலை சம்பவ இடத்திற்கு சென்று சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து, சாலை ஓரம் கிடந்த கைப்பையை கண்டுபிடித்து பாஸ்கரிடம் ஒப்படைத்தனர். பணம் மீட்டு கொடுத்த போலீசாருக்கு, கூலி தொழிலாளி பாஸ்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை