உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகனம் மோதி போலீஸ்காரர் காயம்

வாகனம் மோதி போலீஸ்காரர் காயம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தீபாவளி பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.விழுப்புரம் அடுத்த செம்மார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருள்முருகன், 39; கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், விழுப்புரத்தில் பைக் மூலம் ரோந்துப் பணியில் இருந்தார். விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலை சென்ற போது, திருவாமாத்துார் சந்திப்பு அருகே, பின்னால் வந்த வாகனம் மோதி விட்டுநிற்காமல் சென்றது.இதில், தலையில் படுகாயமடைந்த அருள்முருகன் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை