உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டி

விழுப்புரத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டி

விழுப்புரம் : விழுப்புரத்தில் காணும் பொங்கலையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.கிராம மக்கள் மற்றும் தமிழ் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், கீழ்ப்பெரும்பாக்கத்தில் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.சிறுவர்களுக்கு கபடி போட்டி, சாக்கு ஓட்ட பந்தயம், குறைந்த வேக சைக்கிள் ஓட்டம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளும், மகளிர்க்கு இசை நாற்காலி, கயிறு இழுத்தல், கோகோ போட்டியும், கோலப் போட்டியும், நிறைவாக உறியடித்தல் போட்டியும் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்