உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பொன்முடி மீதான வழக்கு டிச., 2க்கு ஒத்திவைப்பு

 பொன்முடி மீதான வழக்கு டிச., 2க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு வரும் டிச., 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், வானுார் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதி மீறி செம்மண் எடுத்ததாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது, 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆஜராகவில்லை. பொன்முடி தரப்பில் தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆஜராகி, பொன்முடி., எம்.எல்.ஏ., கவுதமசிகாமணி உட்பட 5 பேர் ஆஜராகததற்கான காரணம் குறித்து மனு தாக்கல் செய்தனர். மேலும், சில சாட்சிகளிடம் விசாரணை செய்ய கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி மணிமொழி, வழக்கு விசாரணையை வரும் டிச., 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை