உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொங்கல் பரிசு தொகுப்பு எம்.எல்.ஏ., வழங்கல்

பொங்கல் பரிசு தொகுப்பு எம்.எல்.ஏ., வழங்கல்

விக்கிரவாண்டி, ஜன.11-விக்கிரவாண்டி பேரூராட்சியில் விக்கிரவாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த விழாவிற்கு புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேரூராட்சி 15-வார்டுகளை சேர்ந்த 8 ஆயிரத்தி 693 ரேஷன் கார்டுகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுதொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார். முன்னதாக அங்காளம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய நிழற்குடையை திறந்து வைத்தார்.மாவட்ட பதிவாளர் அழகப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன்,சமூக நல தனி தாசில்தார் ரகுராமன், வட்ட வழங்கல் அலுவலர் விமல் ராஜ் முன்னிலை வகித்தனர். கள அலுவலர் கவுசல்யா வரவேற்றார்.பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, செயல் அலுவலர் ஷேக் லத்திப், வருவாய் ஆய்வாளர்கள் தயாநிதி, தெய்வீகன், தி.மு.க.,ஒன்றிய செயலாளர் ஜெயபால் ,நகர செயலாளர் நைனா முகமது, நகரத் தலைவர் தண்டபாணி,மாவட்ட தலைவர்கள் பாபு ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.வங்கி செயலாளர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ