தனியார் பள்ளி ஆசிரியை மாயம்
விழுப்புரம்: தனியார் பள்ளி ஆசிரியை மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜோசப் செங்குரியா மகள் மரியா டெல்பின், 22; முண்டியம்பாக்கம் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.கடந்த 23ம் தேதி வேலைக்கு சென்ற அவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.