உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்களுக்கு பரிசு

அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்களுக்கு பரிசு

விழுப்புரம்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தில் 6 மண்டலங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகளவு மின்னணு பயணச்சீட்டு பரிவர்த்தனை செய்த கண்டக்டர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழுப்புரம் கோட்ட தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், விழுப்புரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மண்டலங்களில் பணிபுரியும் கண்டக்டர்கள் அதிகளவு மின்னணு பயணச்சீட்டு மூலம் பணமில்லா பரிவர்த்தனை செய்த மண்டலத்திற்கு 2 பேரை தேர்வு செய்து, 12 பேருக்கு மேலாண் இயக்குநர் குணசேகர் பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, மேலாண் இ யக்குநர் பேசுகையில், 'கண்டக்டர்கள் அதிகளவில் பணமில்லா பயணச்சீட்டு வழங்க பஸ் இயக்கத்திற்கு முன்பாகவே பயணிகளிடம் இந்த திட்டம் பற்றி எடுத்து கூறினால் இன்னும் அதிகளவில் பணமில்லா பயணச்சீட்டு பரி வர்த்தனை முழுமையாக நடைமுறைபடுத்தலாம். பஸ்சில் பயணிக்கும் பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்' என்றார். பொது மேலாளர்கள் ரவிச்சந்திரன் (தொழில்நுட்பம்), துரைசாமி (மனிதவள மேம்பாடு), ஜெகதீஷ் (விழுப்புரம் மண்டலம்), பாண்டியன் (கடலுார் மண்டலம்) உட்பட துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், கிளை மேலாளர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை