உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சடலத்துடன் சாலை மறியல் வழக்கறிஞர் கைதை கண்டித்து போராட்டம்

சடலத்துடன் சாலை மறியல் வழக்கறிஞர் கைதை கண்டித்து போராட்டம்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி ஜெயந்தி, 35; கடந்த 15ம் தேதி இரவு அகூர் பஸ் நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத கார் மோதியதில் காயமடைந்து, கடந்த 23ம் தேதி உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய காரை கண்டுபிடிக்காத வெள்ளிமேடுப்பேட்டை போலீசாரை கண்டித்து, ஏதாநெமிலி கூட்ரோட்டில், ஜெயந்தியின் உடலை நடுரோட்டில் வைத்து நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது. சாலை மறியலை துாண்டியதாக, அகூர் பஞ்சாயத்து தலைவரும், மயிலம் தொகுதி அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு அணி செயலாளர் வீரசம்பத்தை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். ரோஷணை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று, அவரது மொபைல்போனை வாங்கி, ஆய்வு செய்தனர். இதையறிந்த திண்டிவனம் வழக்கறிஞர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரியிடம் வாக்குவாதம் செய்தனர். போராட்டம் நடத்தவும் ஆயத்தமாகினர். இதுகுறித்து விழுப்புரம் எஸ்.பி.,யின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து, சம்மன் அனுப்பும் போது ஆஜராக வேண்டும் என்று கூறி, வழக்கறிஞர் வீரசம்பத்தை அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சடலத்தை வைத்து சாலை மறியல் நடத்தியது தொடர்பாக ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்த 5 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை