மேலும் செய்திகள்
உழவர் நலத்துறை திட்டம் துவக்கி வைப்பு
13-Jul-2025
வானுார் : திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் உளுந்து விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். அவர் கூறுகையில், 'உளுந்து சாகுபடி செய்ய ஏக்கருக்கு, 2 கிலோ விதை போதுமானது. ஒரு கிலோ உளுந்துக்கு, 60 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. வரப்பு பயிராக நெல்லில் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் பூச்சி தாக்குதல் குறைக்கப்பட்டு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்' என்றார். இ தில் வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், வேளாண்மை அலுவலர் ரேவதி, உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் பஞ்சநாதன், சுரேஷ் விஜயலட்சுமி மற்றும் ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி, சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
13-Jul-2025