உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கல்லுாரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் 

 கல்லுாரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் 

திண்டிவனம்: திண்டிவனத்தில் தி.மு.க., சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. கோவிந்தசாமி அரசு கல்லுாரி எதிரில், நேற்று காலை விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., மாணவரணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணைச் சேர்மன் ராஜாராம் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் வரவேற்றார். விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மஸ்தான், கல்லுாரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், அவை தலைவர் சேகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு. திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், செயற்குழு உறுப்பினர் சீனிராஜ், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மரக்காணம் ஒன்றிய சேர்மன் தாயளன், துணை சேர்மன் பழனி, வழக்கறிஞர் அசோகன், அயலக அணி முஸ்தபா, நகர துணை செயலாளர் கவுதமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை