உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒன்றிய சேர்மனுக்கு அரசு கார் வழங்கல்

ஒன்றிய சேர்மனுக்கு அரசு கார் வழங்கல்

விக்கிரவாண்டி, - தமிழக அரசு, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 13 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய ஸ்கார்பியோ கார் ஒன்றிய சேர்மனுக்கு வழங்கப்பட்டது.ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி புதிய காருக்கு பூஜை செய்து , காரின் சாவியை ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரையிடம் வழங்கினார். பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், பி.டி.ஓ.,க்கள் சுமதி, முபாரக் அலி பேக், மேலாளர் ஜெயபால், ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், முருகன், ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ஜெயபால், ஒன்றிய தலைவர் முரளி, கண்காணிப்புக் குழு எத்திராசன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ