மழை நிவாரணம் வழங்கக்கோரி கிளியனூரில் பொது மக்கள் மறியல்
வானூர், : நிவாரணத்தொகை வழங்கக்கோரி கிளியனூரில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கிளியனூர் அடுத்த கொஞ்சிமங்கலம், எடச்சேரி பகுதியை சேர்ந்த மக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு ரூ. 2 ஆயிரம் நிவாரணத்தொகை அறிவித்துள்ளது. இந்நிலையில், கிளியனூர் பகுதி மக்கள் தங்களுக்கும் நிவாரணம் வழங்க கோரி, நேற்று பிற்பகல் 1;00 மணிக்கு கடை வீதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தாசில்தார் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு நிவாரணம் குறித்து முடிவெடுக்கப்படும் என போலீசார், மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் கூறியதின் பேரில் 1.30 மணியளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.