உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஆட்டை குதறிய வெறிநாய்கள்: சி.சி.டி.வி., காட்சிகள் வைரல்

 ஆட்டை குதறிய வெறிநாய்கள்: சி.சி.டி.வி., காட்சிகள் வைரல்

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பத்தில் தெருவில் சுற்றி திரிந்த வெறிநாய்கள் சாலையில் சென்ற ஆட்டை கடித்து குதறிய சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோட்டக்குப்பம் பகுதிகளில் வெறிநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலைகளில் செல்வோரை கடித்து குதறி வருகிறது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் கோட்டக்குப்பம் பர்கத் நகர்,.6வது குறுக்குத் தெருவில் நேற்று சாலையில் கும்பலாக சென்ற ஆடுகளை வெறிநாய்கள் துரத்தி சென்றது. 5 ஆடுகள் தப்பித்து ஓடியது. ஒரு ஆடு மட்டும் வெறிநாய் கும்பலிடம் சிக்கி கொண்டது. நாய்கள் கும்பலாக சேர்ந்து ஆட்டை கடித்து குதறியது. அப்பகுதிக்கு வந்த நபர் வெறிநாய்களை அடித்து துரத்தி ஆட்டை மீட்டார். இச்சம்பம் தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ