உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசை கைகாட்டும் முதல்வர்: ராமதாஸ் குற்றச்சாட்டு

இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசை கைகாட்டும் முதல்வர்: ராமதாஸ் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டிவனம்: 'ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டால், அவர் மத்திய அரசை கை காட்டுகிறார் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தில் சரசுவதி கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில், பா.ம.க.,நிறுவனர் ராமதாசின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு, முப்பெரும் விழா நடந்தது. பா.ம.க., கவுரவ தலைவர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cii1htsd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விழாவில், பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். நானும் உங்களை விட்டால் யார் கொடுப்பார்கள் என்று கூறினேன். அதற்கு ஸ்டாலினும் தலையாட்டினார். தமிழக மக்கள் இன்னும் இரண்டு மாதத்தில் இடஒதுக்கீடு குறித்து பேசப்போகிறார்கள். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டால், அவர் மத்திய அரசை கை காட்டுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 26, 2024 14:06

சுதந்திரம் அடைந்து ஏழுபத்திதைந்து வருடங்கள் கடந்தும் இன்னும் நம்மால் ஜாதி விட்டு வெளியே வர முடியவில்லை.


சொல்லின் செல்வன்
ஜூலை 25, 2024 17:30

" ம்ம்ம்ம்ம் " " ம்ம்ம்ம்ம்ம் "


Swaminathan L
ஜூலை 25, 2024 17:19

சாதி வாரி சர்வே செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கும், கணக்கெடுப்பு, சென்சஸ் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கும் இருக்கிறது. சர்வே செய்தால், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கிட முடியும். அவ்வளவே. மத்திய அரசு, தொகுதி மறு வரையறை செய்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன்பின் இட ஒதுக்கீடு மாற்றங்கள் செய்தாக வேண்டும். ஆகையால், இப்போதைக்கு சர்வே செய்து அதன்பின் சரியெனில், வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசால் முடியும்.


Apposthalan samlin
ஜூலை 25, 2024 16:43

ராமதாஸ் மக்களே அவருக்கு வோட்டை போட மாட்டேன்கிறார்கள்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி