உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

செஞ்சி: ஆபாச வீடியோவைக் காட்டி இளம் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் வெங்கடேசன், 30; இவர், 20 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி பழகி வந்த இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.மேலும், அந்த பெண்ணிடம் ஆபாச வீடியோவைக் காட்டி, மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதற்கு உடந்தையாக அவரது அண்ணன் புருேஷாத்தமன், 32; சகோதரி புஷ்பா, 35; மாமா பூபாலன் 40; ஆகியோர் இருந்துள்ளனர்.இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில், வெங்கடேசன், புருஷேத்தமன், புஷ்பா பூபாலன் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி