மேலும் செய்திகள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
11-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரம் அருகே தீ விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு லட்சுமணன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகளை வழங்கினார். விழுப்புரம் அருகே மழவராயனுார் கிராமத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில், வெண்ணிலா என்பவரது கூரை வீடு எரிந்து சேதமானது. தகவல் அறிந்த லட்சுமணன் எம்.எல்.ஏ., நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டு, தீ விபத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசின் நிவாரண தொகை மற்றும் சொந்த நிதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், வழக்கறிஞர் கண்ணப்பன், ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, மாவட்ட விவசாய அணி தவமணி, ஊராட்சி தலைவர் முருகன், கிளைச் செயலாளர்கள் கலியமூர்த்தி, சுந்தர்ராஜன், ராம், தயாநிதி, பிரகதீஸ்வரன், ரஞ்சித்குமார், ஜனார்த்தனன் உட்பட பலர் பங்கேற்றனர்.
11-Oct-2025