உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம்

 தீ விபத்தில் பாதித்த குடும்பத்திற்கு நிவாரணம்

விழுப்புரம்: வளவனுார் அருகே தீ விபத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வளவனுார் அடுத்த சிறுவந்தாடு சாலை வாணிசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் காத்தவராயன் மனைவி திவ்யா. இவரது கூரை வீட்டில், மின் கசிவு காரணமாக, நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த லட்சுமணன் எம்.எல்.ஏ., நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, தீ விபத்தில் பாதித்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார். 5,000 ரூபாய் நிவாரண தொகை மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், பெட்ஷீட், பாய், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன. வளவனுார் சேர்மன் மீனாட்சி ஜீவா, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, பேரூராட்சி செயலாளர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், வழக்கறிஞர் கண்ணப்பன், விழுப்புரம் மண்டல துணை தாசில்தார் திருமாவளவன், வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, வி.ஏ.ஓ., ஜெயராமன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை