உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஒழிந்தியாம்பட்டு - கீழ்புத்துப்பட்டு வரை சாலையோர முட்புதர்கள் அகற்றம்

 ஒழிந்தியாம்பட்டு - கீழ்புத்துப்பட்டு வரை சாலையோர முட்புதர்கள் அகற்றம்

வானுார்: ஒழிந்தியாம்பட்டு முதல் கீழ்புத்துப்பட்டு வரை 13 கி.மீ., துாரத்திற்கு முட்புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது. புதுச்சேரி - திண்டினம் புறவழிச் சாலையில் இருந்து ஒழிந்தியாம்பட்டு, கழுப்பெரும்பாக்கம் வழியாக கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. 13 கி.மீ., துாரம் கொண்ட இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. குறிபாக கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையோரத்தில் இரு பக்கமும் முட்புதர்கள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால் எதிர் எதிரே வரும் வாகனங்ளுக்கு வழி விட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து வானுார் நெடுஞ்சாலைத்துறைக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கிருஷ்ணன், அறிவுறுத்தலின் பேரில், ஒழிந்தியாம்பட்டு முதல் கீழ்புத்துப்பட்டு வரை இருபக்கமும் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சாலையோர முட்புதர்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி