உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்டாச்சிபுரம் - விழுப்புரம் இடையே கட் சர்வீஸ் பஸ்கள் இயக்க கோரிக்கை

கண்டாச்சிபுரம் - விழுப்புரம் இடையே கட் சர்வீஸ் பஸ்கள் இயக்க கோரிக்கை

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம்-விழுப்புரம் இடையே காலை, மாலை வேளைகளில் கட் சர்வீஸ் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டாச்சிபுரத்தைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விழுப்புரத்திற்கு தினமும் பணி நிமித்தமாக விவசாயிகள், அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர். ஆனால், கண்டாச்சிபுரத்தில் இருந்த விழுப்புரம் செல்ல முக்கிய நேரமான காலை 4:00 மணி முதல் 10:00 மணி வரை போதுமான பஸ்கள் இல்லை. இதனால் திருவண்ணாமலையிலிருந்து வரும் தனியார் மற்றும் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். பீக் ஹவர் எனப்படும் இந்த நேரத்தில் ஒரே பஸ்சில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் நிலை உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் விழுப்புரம் நகரில் புதிதாக உருவாகியுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களிலும், கட்டுமான நிறுவனங்களிலும் கிராமப்புற பணியாளர்கள் பணியாற்று கின்றனர். இவர்கள் அனைவரும் தங்களது கிராமத்திலிருந்து தினமும் விழுப்புரத்திற்கு சென்று வர தினமும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால், கண்டாச்சி புரத்திலிருந்து காலை 4:00 மணி முதல் 9:00 மணி வரை 30 நிமிடத்திற்கு ஒரு முறை விழுப்புரத்திற்கு கட் சர்வீஸ் பஸ்களை இயக்க அதிகாரிகள் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை