உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கப்பியாம்புலியூரில் சப்வே அமைக்க கோரி சாலை மறியல்

 கப்பியாம்புலியூரில் சப்வே அமைக்க கோரி சாலை மறியல்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த கப் பியாம்புலியூரில் சாலை விபத்துகளை தடுக்க பள்ளி எதிரே சப்வே அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விக்கிரவாண்டி ஒன்றியம் கப்பியாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தஞ்சாவூர் - கும்பகோணம் நான்கு வழிச் சாலையோரம் உள்ளது. இப்பகுதியில் பள்ளி மாணவர்கள், கிராம பொதுமக்கள் சாலையை கடந்து செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு பள்ளி மாணவர்கள், கிராம பொதுமக்கள் பாதுகாப்பாக சாலை கடப்பதற்கு நான்கு வழிச்சாலையில் பள்ளி எதிரே சப்வே அமைத்து தர கோரி நேற்று காலை 11 மணிக்கு, பொதுமக்கள் கும்பகோணம் - சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த விக்கிரவாண்டி டி.எஸ்.பி. சரவணன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்து துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை