உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலை ஒப்பந்த நிறுவனத்தினர் இடத்தை காலி செய்ய நெருக்கடி

சாலை ஒப்பந்த நிறுவனத்தினர் இடத்தை காலி செய்ய நெருக்கடி

விழுப்புரம் அருகே நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர், தங்கள் பிளாண்ட்டை காலி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.விழுப்புரம்-புதுச்சேரி புதிய நான்கு வழிச்சாலை திட்டப் பணிகளை, மத்திய பிரதேசத்தை சேர்ந்த திலிப் பில்டுகான் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் மேற்கொண்டுள்ளனர். இந்த நிறுவனத்தினர், வளவனூர் அருகே தனியார் நிலத்தை ஒப்பந்தம் எடுத்து, அதில் தங்கள் பிளாண்ட் அமைத்து, சாலை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது சாலை பணிகள் முடிந்த நிலையில், அந்த ஒப்பந்த தனியார் நிலத்தை காலி செய்வதாக நிறுவனத்தினர் முடிவு செய்து, அதற்கான கடிதத்தையும் நில உரிமையாளிரிடம் கொடுத்துள்ளனர். ஆனால், நிலத்தை ஒப்பந்தத்திற்கு விட்ட உரிமையாளர்கள் தரப்பில், இடத்தை காலி செய்வதற்கு பல நிபந்தனைகளை விதித்து நெருக்கடி கொடுப்பதாகவும், அங்குள்ள பொருள்களையும் கொண்டுசெல்லாமல் தடுப்பதாகவும், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் அதிருப்தி தெரிவித்துள்னர்.இது குறித்து, அந்த திலிப்பில்டுகான் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: வளவனூர் அருகே தனியார் நிலத்தில், பிளாண்ட் அமைத்து, ஒப்பந்தப்படி பணிகள் மேற்கொண்டோம். பணிகள் முடிந்து, நாங்கள் இடத்தை காலி செய்கிறோம். உரிய வாடகையும் செலுத்தப்பட்டுவிட்டது.ஆனால், அந்த இடத்தில் 1,000 லோடு மண் அடித்து நிரப்பித்தர வேண்டும், அங்கு எஞ்சியுள்ள ரூ.20 லட்சம் மதிப்பிலான, சாலை கட்டுமான பொருள்களை எடுத்துச்செல்லக்கூடாது என தடுக்கின்றனர். இது குறித்து, வளவனூர் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று,வேதனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி