| ADDED : ஜன 23, 2024 05:09 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பையொட்டி ெஹல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தமிழகத்தில் 35வது சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, விழுப்புரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் ெஹல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்த், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.ஊர்வலத்தில், விழுப்புரத்தைச் சேர்ந்த இரு சக்கர வாகனம் பழுது பார்ப்போர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ெஹல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் வழியாகச் சென்று ரயில் நிலையம் அருகே முடிவடைந்தது. போக்குவரத்து பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் உட்பட போலீசார் பங்கேற்றனர்.