மேலும் செய்திகள்
மனைவி கழுத்தை கத்தியால் கிழித்த கணவரிடம் விசாரணை
20-Sep-2025
திண்டிவனம்: திண்டிவனம் அருகே விபத்தில் சிக்கிய டிரைவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ் செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்புத்துாரில் இருந்து நேற்று முன்தினம் மாலை 3;00 மணிக்கு, கன்டெய்னர் லாரி ஒன்று சென்னை எண்ணுார் துறைமுகத்திற்கு 2 ஜே.சி.பி., இயந்திர உபகரணங்கள் ஏற்றிக்கொண்டு சென்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் நமச்சிவாயபுரத்தை சேர்ந்த மணிகண்டன், 38; ஓட்டி வந்தார். நேற்று பகல் 12:30 மணிக்கு திண்டிவனம் அடுத்த திருவண்ணாமலை சாலை சந்திப்பு அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, திடீரென சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த டிரைவர் மணிகண்டன், படுகாயத்துடன், லாரிக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தார். அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த ரோஷணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஒரு லட்சம் அபேஸ் டிரைவர் மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், லாரியில் ரூ.1 லட்சம் கேஷ் பேக்கில் வைத்திருப்பதாக கூறினார். ஆனால், அந்த பணத்தை டிரைவரை காப்பாற்றும்போது, உதவ வந்த நபர் அபேஸ் செய்தது தெரியவந்தது. அதையடுத்து, அந்த பணத்தை மீட்டுத்தர போலீசாரிடம் மணிகண்டன் தெரிவித்தார். விபத்து குறித்து ரோஷணை போலீசார் விசாரித்து வருவதோடு, விபத்தில் சிக்கிய நபரிடம் ரூ.1 லட்சம் அபேஸ் செய்த நபரையும் தேடி வருகின்றனர்.
20-Sep-2025