உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அரசு பஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு பயணம் விழிப்புணர்வு

 அரசு பஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு பயணம் விழிப்புணர்வு

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மண்டலம் சார்பில் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச் சியில் பாதுகாப்பான பயணத்திற்காக சாலை விதிகளை பின்பற்றுதல், வேக வரம்பை கடைபிடித்தல், சிக்னல்களை பின்பற்றுதல். வளைவுகளில் முந்தி செல்லாமை, வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்தாமை, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாமை ஆகியவற்றை செய்ய வேண்டும். வாகனத்தில் பிரேக், டயர்கள், விளக்குகளை சரிபார்த்து இயக்கிட வேண்டும் என அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துணை மேலாளர்கள் சிவக்குமார், அறிவண்ணல், உதவி மேலாளர்கள் சிவராமன், பிரபு உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி