உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மணல் கடத்தல் மாட்டு வண்டிகள் பறிமுதல்

 மணல் கடத்தல் மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருவெண்ணெய்நல்லுார்: தென் பெண்ணையாற்றில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று காலை 6:00 மணியளவில் சி.மெய்யூர் கிராம பகுதியில் உள்ள தென்பெண்ணையாறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசை பார்த்ததும் தப்பியோடினர். போலீசார் 6 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ