உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ரூ.3.76 கோடியில் பள்ளி வகுப்பறை கட்டடங்கள்: கண்டமங்கலத்தில் திறப்பு விழாவிற்கு தயார்

 ரூ.3.76 கோடியில் பள்ளி வகுப்பறை கட்டடங்கள்: கண்டமங்கலத்தில் திறப்பு விழாவிற்கு தயார்

கண்டமங்கலம்: கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3.76 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டங்கள் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. கண்டமங்கலம் நான்கு வழிச்சாலையில் 62 ஆண்டுகள் பழமையான வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் 888 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்ற னர். விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக, பள்ளியில் சாலையோரம் இருந்த வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வகங்கள் இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் போதிய வகுப்பறைகள் இன்றி பள்ளி வளாகத்தில் மரங்களின் நிழலில் மண் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை இருந்து வந்தது. அப்பகுதி மக்கள் கோரிக்கையைத் தொடர்ந்து, நபார்டு திட்டத்தின் மூலம் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்ட 3.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளிக்கு பள்ளிக்கு 14 வகுப்பறைக் கட்டங்கள் மற்றும் இரண்டு அறிவியல் ஆய்வகங்களுக்கான கட்டுமான பணி கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. ஒன்றிய சேர்மன் வாசன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். கட்டுமானப் பணி கள் அனைத்தும் நிறைவுபெற்று, திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ