உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்சோ வழக்கில் பள்ளி முதல்வர் கைது

போக்சோ வழக்கில் பள்ளி முதல்வர் கைது

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம்திண்டிவனத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 41;ரெட்டணை என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வர். இவர் தன் பள்ளியில்படிக்கும் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.இதற்கிடையே, மேலும் ஒரு மாணவி, தன்னையும் அடிக்கடி அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக, கார்த்திகேயன் மீது புகார் தெரிவித்தார். அதன் மீதும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர், 14ல், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், விசாரணை நடத்தி, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். நேற்று முன்தினம் காலை, அவரது வீட்டில்இருந்த கார்த்திகேயனை, போலீசார் கைது செய்து, விழுப்புரம் 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஹெர்மிஸ் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி