| ADDED : ஜன 07, 2024 05:13 AM
விழுப்புரம்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான மாதாந்திர கூராய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனைப் பாதுகாப்பது அனைவரின் முக்கிய கடமையாகும். அந்த வகையில், பொது இடங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பணிபுரியும் நிறுவனங்கள் உட்பட பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.போதிய அளவில் விழிப்புணர்வு நடவடிக்கையை துறை சார்ந்த அலுவலர்கள் எடுக்க வேண்டும்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் கண்டறிந்தால் விரைவாக பதிவதோடு, குற்றப் பத்திரிக்கையை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அவர்கள் மீது தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதர், குற்ற வழக்கு தொடர்புத் துறை கூடுதல் இயக்குனர் கலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, சமூகநல அலுவலர் ராஜம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.