உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாலிபால் போட்டியில் பங்கேற்க இன்று அணி வீரர்கள் தேர்வு

வாலிபால் போட்டியில் பங்கேற்க இன்று அணி வீரர்கள் தேர்வு

விழுப்புரம்: வேலுாரில் நடக்கும் மாநில அளவிலான சப் ஜூனியர் வாலிபால் போட்டியில் பங்கேற்கும், விழுப்புரம் மாவட்ட அணியின் வீரர், வீராங்கனை தேர்வு இன்று 21ம் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது.தமிழ்நாடு வாலிபால் கழகம் மற்றும் விழுப்புரம் மாவட்ட வாலிபால் கழகத் தலைவர் கவுதம சிகாமணி எம்.பி., செய்தி குறிப்பு:தமிழக அளவில் வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை 16 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி, வேலுாரில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் விழுப்புரம் மாவட்ட அணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான தேர்வு போட்டி, இன்று 21ம் தேதி காலை 8:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக வளாகத்தில் நடக்கிறது.போட்டி தேர்வில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் விராங்கனைகள் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்காக, ஆதார் அடையாள அட்டை அல்லது வயது நிரூபிக்கும் சான்றிதழ்களில், ஏதாவது ஒன்றின் அசலை கொண்டு வந்து போட்டி தேர்வில் பங்கேற்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை