உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செங்குந்த மகா ஜன சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

செங்குந்த மகா ஜன சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

செஞ்சி: செஞ்சியில் செங்குந்த மகாஜன சங்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.நகர தலைவர் சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட பொருளாளர் முத்துகுமாரசாமி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் மாணிக்கம் வரவேற்றார். மாவட்ட தலைவராக முருகன், செயலாளராக குமரகுருபரன், பொருளாளராக விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினராக முத்துகுமாரசாமி, பன்னீர்செல்வம், கார்த்திகேயன், மகாலிங்கம் ஆகியோர் பதவியேற் றனர்.நெடுங்குணம் முன்னாள் ஊராட்சி தலைவர் ஏழுமலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாநிலத் தலைவர் செல்வராஜ், பொருளாளர் காந்தி சிறப்புரையாற்றினர்.ஆடிட்டர் பாண்டியன் நிர்வாகிகள் சர்வேஸ்வரன், அம்பலவாணன், சவுந்தர், ஞானவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட நிர்வாகிகள், கிளை சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். நகர பொருளாளர் ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி