உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் டிரைவர்களுக்கு சித்த மருத்துவ முகாம்

அரசு பஸ் டிரைவர்களுக்கு சித்த மருத்துவ முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனையில் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான சித்த மருத்துவ முகாம் நடந்தது.மாவட்ட சித்தா மருத்துவமனை சார்பில் நடந்த முகாமிற்கு, அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். தலைமை நிதி ஆலோசகர் அனுஷா, தலைமை தணிக்கை அலுவலர் சிவக்குமார், பொது மேலாளர்கள் ரவீந்திரன், சதீஷ்குமார் (இயக்கம்) முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து சித்தா டாக்டர் கருணாமூர்த்தி, அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு பணிச்சுமை, மனச்சுமை அதிகம் உள்ளதால், இவர்கள் தியானம், யோகா மட்டுமின்றி சித்தா மருத்துவ முறையை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.பின், சித்தா டாக்டர்கள் அஜிதா, ராஜன், நித்தியகுமாரி, ஷகிலா, சதேஷ், புவனாம்பிகா, இளஞ்செழியன் ஆகியோர் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். 200க்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் உட்பட போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !