| ADDED : நவ 22, 2025 04:46 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எம்.எல்.ஏ., பார்வையிட்டார். திண்டிவனத்தில் அ.தி.மு.க., சார்பில் தீர்த்தக்குளம் 12வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள முகாமையில் திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அர்ஜூனன் நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், மாவட்ட அவைத் தலைவர் தீனதயாளன், மாநில ஜெ.,பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம், அ.தி.மு.க., நகர செயலாளர் ரூபன்ராஜ், எம்.ஜி.ஆர்., மன்றம் ஏழுமலை, கவுன்சிலர் சரவணன், நகர ஜெ.,பேரவை உதயகுமார், இளைஞரணி சவுகத்அலி உட்பட பலர் பங்கேற்றனர்.