மேலும் செய்திகள்
கொத்தடிமை பணியாளர் ஐ.ஜி., அறிவுரை
05-Sep-2025
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் யமுனாபாய் தலைமை வகித்தார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தவமணி, நீலமேகம், தலைமை காவலர் அழகுவேல் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு, இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது தொடர்பாக விரிவாக எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்களுக்கு சமூக நீதி தொடர்பான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு சான் றிதழ்கள் வழங்கப்பட்டன.
05-Sep-2025