உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  எதப்பட்டில் இடிந்து விழும் நிலையில் நிழற்குடைகள்

 எதப்பட்டில் இடிந்து விழும் நிலையில் நிழற்குடைகள்

அவலுார்பேட்டை: எதப்பட்டில் சேதமான நான்கு நிழற்குடைகளை புதிதாக கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தின் கடைசி பகுதியாக மேல்மலையனுார் வட்டத்தைச் சேர்ந்த எதப்பட்டு கிராமம் உள்ளது. 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தேவிகாபுரம் செல்லும் சாலை வழியில் பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடை சில ஆண்டுகளாக சேதமடைந்து பயன்டுத்துவதற்கு லாயக்கற்ற நிலையில் பாழடைந்து காணப்படுகிறது. மக்கள் பயன்படுத்தாத நிலையில் நிழற்குடை கட்டடம் அருகே வாழை மரங்களும், புதர்களும் காட்சி தருகிறது. மேல்பகுதியில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்த துருபிடித்த கம்பிகள் தெரிந்து, எப்போது விழும் என்று தெரியாமல் அபாய நிலையில் உள்ளது. இதே போல், அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியிலும், ஆலமரம் மற்றும் அவலுார்பேட்டை வழியிலும் என மொத்தம் உள்ள நான்கு நிழற்குடைகளும் சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. கிராம மக்கள் பஸ்சுக்காக வெயில், மழை காலங்களில் காத்திருக்கும் போது அவதிப்படுகின்றனர். மாவட்டத்தின் கடைசி பகுதியாக இருப்பதால் யாரும் கண்டு கொள்வதில்லை என கிராம மக்கள் ஆதங்கப்படுகின்றனர். அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு புதிதாக நிழற்குடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ